Ajith: துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தேர்வான அஜித் - ரசிகர்கள் மகிழ்ச்சி

Ajith: துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தேர்வான அஜித் - ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் அஜித்

40-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
    தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ்,கார் ரேஸ் போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.

    தற்போது வலிமை படப்பிடிப்பு இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வரும் அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையத்தில் கசிந்த இத்தகவலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    சமீப காலமாக எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளப்புக்கு அஜித் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவில் தனது பயிற்சியாளரின் அறிவுரையை மிகுந்த மரியாதையுடன் அஜித் கேட்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.



    ‘வலிமை’ அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அஜித்தின் துப்பாக்கி சுடுதல் போட்டி குறித்த அப்டேட் வெளியாகி வருவது ரசிகர்களுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்திருக்கிறது.
    Published by:Sheik Hanifah
    First published: