கமல்ஹாசனுக்காக நடக்கும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கிறாரா தல அஜித்?

அடுத்த நாள் திரையுலகில் கமல்ஹாசனுக்கு குருவாக இருந்த மறைந்த இயக்குநர் பாலச்சந்தருக்கு ராஜ் கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் சிலை திறக்கப்பட உள்ளது.

கமல்ஹாசனுக்காக நடக்கும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கிறாரா தல அஜித்?
அஜித், கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: November 6, 2019, 6:55 PM IST
  • Share this:
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும்விதமாக அவரது 65-வது பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1959-ம் ஆண்டு 5 வயது குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் கமல்ஹாசன்.
திரையுலகில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகளாகியிருக்கும் நிலையில் அந்தத் துறையில் பன்முகத் திறமை கொண்ட ஆளுமையாகவும் இந்திய சினிமா வரலாற்றில் தனித்துவம் மிக்க கலைஞனாகவும் விளங்கி வருகிறார்.


சினிமாவைத் தாண்டி அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் கமல்ஹாசன் நவம்பர் 7-ம் தேதியன்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்த பிறந்தநாள் விழா மூன்று நாள் விழாவாக நடக்க இருக்கிறது.

இதில் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகினர் பலரும் கலந்து கொள்கின்றனர்.

நவம்பர் 7-ம் தேதியன்று கமல்ஹாசனின் தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினம் என்பதால் பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு சீனிவாசனின் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்.அடுத்த நாள் திரையுலகில் கமல்ஹாசனுக்கு குருவாக இருந்த மறைந்த இயக்குநர் பாலச்சந்தருக்கு ராஜ் கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் பாலச்சந்தர் குடும்பத்தினர் கலந்து கொள்கின்றனர்.

கமல்ஹாசனின் 60-வது ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி வரும் 17-ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் கமல்ஹாசனை வாழ்த்த ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத நடிகர் அஜித்துக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் கலந்துகொள்வார் என்று அவர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் மூத்த நடிகரான கமல்ஹாசனைப் பாராட்டுவதற்காக அஜித் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றே கூறுகிறது கோலிவுட் வட்டாரம். அஜித் நேரில் கலந்து கொள்வாரா அல்லது கமல்ஹாசனை போனில் அழைத்து வாழ்த்து தெரிவிப்பாரா என்பது நாளை தெரிந்துவிடும்.
First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்