துப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித்! - வைரலாகும் வீடியோ!

news18
Updated: July 31, 2019, 1:16 PM IST
துப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித்! - வைரலாகும் வீடியோ!
அஜித் குமார்
news18
Updated: July 31, 2019, 1:16 PM IST
துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜித் திரைத்துறை மட்டுமின்றி கார் ரேஸ், ஃபோட்டோகிராபி, ஆளில்லா விமானங்களைத் தயாரிப்பது ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு ஆளில்லா விமானங்களை தயாரிப்பதில் உலக அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.

சமீபத்தில் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி எடுத்து வந்த நடிகர் அஜித் கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான  துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டுள்ளார்.


கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கடந்த 28-ம் தேதி துவங்கி வரும் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், கோவை ரைபிள் கிளப், எஸ்.டி.ஏ.டி.ஷுட்டிங் அகாடமி,சென்னை ரைபிள் கிளப்,மதுரை ரைபிள் கிளப் உள்ளிட்ட பல்வேறு கிளப்புகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.அஜித் வருகையை அடுத்து போட்டி நடைபெறும் பகுதியில் வழக்கத்தை விட அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Loading...
இந்தப் போட்டியில் அஜித் தவிர மாநிலஅளவிலான துப்பாக்கி சுடும் வீரர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக சென்னை ரைஃபில் கிளப்பில் நடைபெற்ற 25 மீட்டர் பிரிவில் நடிகர் அஜித் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறதுவீடியோ பார்க்க: பொன்னியின் செல்வனில் இணைந்த பார்த்திபன்!

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...