‘தல 60’ ஆரம்பமாகிடுச்சா... வைரலாகும் அஜித்தின் போட்டோ ஷூட்!

news18
Updated: September 10, 2019, 2:58 PM IST
‘தல 60’ ஆரம்பமாகிடுச்சா... வைரலாகும் அஜித்தின் போட்டோ ஷூட்!
அஜித் 60
news18
Updated: September 10, 2019, 2:58 PM IST
அஜித்தின் 60-வது படத்துக்கான போட்டோ ஷூட் பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத்தின் சொந்த கதையில் நடிக்கிறார் அஜித். இந்தப் படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்தப் படம் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லார் படமாக உருவாகிறது. இதற்காக அஜித் தனது உடல் எடையக் குறைத்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. மேலும் இந்தப் படத்தில் அஜித் பைக் ரேஸராகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், படத்துக்கான போட்டோ ஷுட் பணிகள் துவங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் ‘தல 60’ படம் ஆரம்பமாகிடுச்சா என்று ஆச்சர்யமாக புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். அதேவேளையில் இது அஜித்தின் 60-வது படத்துக்கான போட்டோ ஷூட் தானா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.வீடியோ பார்க்க: கதை அமைந்தால் அஜித் போல நடிப்பேன்: ஜி.வி. பிரகாஷ்

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...