அஜித்துடன் மோதுவதற்கு தயாரான நயன்தாரா!

news18
Updated: August 5, 2019, 8:49 PM IST
அஜித்துடன் மோதுவதற்கு தயாரான நயன்தாரா!
அஜித் | நயன்தாரா
news18
Updated: August 5, 2019, 8:49 PM IST
அஜித்தின் நேர்கொண்ட பார்வையும், நயன்தாராவின் கொலையுதிர் காலமும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ளது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர்காலம் சென்ற மாதமே திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் தலைப்பில் ஏற்பட்ட காப்பிரைட் பிரச்சனையால் தள்ளிப்போனது. அச்சிக்கலுக்குப் பின், ஜுலை 26-ம் தேதி படம் வெளியாகவுள்ளதாக போஸ்டருடன் வெளியிட்டது படக்குழு.

அதேவேளையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக்காக தமன்னா நடிப்பில் ஜூன் 14 -ம் தேதி வெளியான காமோஷி படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் தமிழில் வியாபார சிக்கல் ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றத்துக்குள்ளாகி வந்தது. ஆகஸ்ட் 1-ம் தேதி ஜோதிகாவின் ஜாக்பாட் படத்துடன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட கொலையுதிர்காலம் மீண்டும் தள்ளிப்போனது.


இந்நிலையில், நயன்தாராவின் கொலையுதிர் காலம் ஆகஸ்ட் 9-ம் தேதி திரைக்கு வரும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி, பலத்த எதிர்பார்ப்புடன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவிருப்பதால் அஜித்துடன் நயன்தாரா படமும் மோதவுள்ளது.

இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றிப்படமான விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா இருவரும் இணைந்து நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரச் சிக்கல் தீர்ந்தது எப்படி?

Loading...

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...