முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித் படத்திலிருந்து வெளியேறிய விக்னேஷ் சிவன்?.. நீதிகேட்டு ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்..!

அஜித் படத்திலிருந்து வெளியேறிய விக்னேஷ் சிவன்?.. நீதிகேட்டு ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்..!

அஜித் - விக்னேஷ் சிவன்

அஜித் - விக்னேஷ் சிவன்

அஜித்குமாரின் 62வது படத்தை தடம், தடையற தாக்க, கலகத்தலைவன் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியானது. இது வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த திரைப்படத்திற்கு அஜித்குமார் தயாராகியுள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித்குமாரின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏகே 62 என்ற தற்காலிக தலைப்புடன் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வந்தன. அத்துடன் அந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்கு பிந்தைய ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 75 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது லைகா. இதை அந்த நிறுவனம் பொங்கல் அன்று வெளியிட்டது.

இந்த நிலையில் அந்த படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்குமாரின் 62வது படத்தை தடம், தடையற தாக்க, கலகத்தலைவன் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், விக்னேஷ் சிவன் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், Justice for VigneshShivan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதேபோல அஜித்தின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி உள்ளிட்டோரும் இயக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

First published:

Tags: Ajithkumar, Vignesh Shivan