அஜித்தை வைத்து மீம் பதிவிட்ட நெட்டிசன்கள் - 'சச்சின்' பட இயக்குநர் கண்டனம்!

அஜித்தை வைத்து மீம் பதிவிட்ட நெட்டிசன்கள் - 'சச்சின்' பட இயக்குநர் கண்டனம்!
அஜித் குமார்
  • Share this:
தேர்தல் நேரத்தில் வாக்களிக்க வரிசையில் நின்ற அஜித்தை வைத்து மீம் உருவாக்கி அதை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெட்டிசனுக்கு சச்சின் பட இயக்குநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பின்னர் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 17 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை தொடர்கிறது.

இதனிடையே சில நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகளை திறைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மதுபானக் கடைகளை இன்று முதல் திறக்க உத்தரவு பிறப்பித்தது.


இதைத்தொடர்ந்து மதுபானக் கடைகளின் முன்பு ஆயிரக்கணக்கான மது பிரியர்கள் ஒன்று கூடினர். அதிகமாக கூட்டம் கூடிய ஒரு சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளியும் காற்றில் பறக்க விடப்பட்டது.

மது பிரியர்கள் டாஸ்மாக் கடை வெளியில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை, தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் அஜித்துடன் ஒப்பிட்டு மீம் உருவாக்கி அதை சமூகவலைதளத்திலும் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர். இதைப்பார்த்த சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன், இது மிகவும் மலிவான பதிவு என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.


First published: May 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading