ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசை விட வேகம் காட்டும் துணிவு… தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ரெட் ஜெயன்ட்

வாரிசை விட வேகம் காட்டும் துணிவு… தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ரெட் ஜெயன்ட்

துணிவு - வாரிசு போஸ்டர்கள்

துணிவு - வாரிசு போஸ்டர்கள்

இரண்டு நாட்களாக தமிழகத்தில் துணிவு திரைப்படத்திற்கு திரையரங்குகளை ரெட் ஜெயன்ட் நிறுவனம் இறுதி செய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு திரைப்படத்திற்கு தமிழகத்தில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இறங்கியுள்ளது.

அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்திருக்கும் துணிவு திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதற்கான அறிவிப்பு ஒரு மாதத்திற்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் படத்திற்கான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் துணிவு திரைப்படத்திற்கு திரையரங்குகளை ரெட் ஜெயன்ட் நிறுவனம் இறுதி செய்து வருகிறது.

‘பாடல் எழுதுவதை விட்டு விடலாமா என்று எண்ணினேன்…’ – அனுபவங்களை பகிர்ந்த கவிஞர் தாமரை

குறிப்பாக ஒற்றைத் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் முதல் வாரம் விநியோகஸ்தருக்கு 75 சதவீதமும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு 25 சதவீதமும்,  இரண்டாவது வாரம் விநியோகஸ்தருக்கு 70% திரையரங்குகளுக்கு 30 சதவீதமும் என்ற அடிப்படையில் திரையரங்குகளை துணிவு திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்து வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்காத இருக்கும் நிலையில், துணிவு திரைப்படத்திற்கான திரையரங்கு ஒப்பந்த பணிகள் மும்முரமாக தொடங்கியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு…

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர், அஜித், இயக்குனர் எச்.வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்திருக்கிறது.

இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவை மேற்கொள்ள ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். துணிவு படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Actor Ajith, Actor Vijay