ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹீரோ இல்ல.. இயக்குநர் இருக்காரு! துணிவு பட ஷூட்டிங்கில் வினோத்! ட்ரெண்டாக்கும் ஃபேன்ஸ்!

ஹீரோ இல்ல.. இயக்குநர் இருக்காரு! துணிவு பட ஷூட்டிங்கில் வினோத்! ட்ரெண்டாக்கும் ஃபேன்ஸ்!

எச். வினோத் - அஜித்

எச். வினோத் - அஜித்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் - அஜித் மற்றும் போனிகபூர் கூட்டணி ‘துணிவு’ படத்தில் இணைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் ஷூட்டிங் சென்னை மவுண்ட் ரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குனர் எச். வினோத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.

    நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் - அஜித் மற்றும் போனிகபூர் கூட்டணி ‘துணிவு’ படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மஞ்சு வாரியர், ஜான் கோகன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

    இவர்களுடன் பிக்பாஸில் புகழ்பெற்ற அமீர், பாவ்னி உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள். துணிவு படத்தின் ஷூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் கடைசி கட்டமாக தாய்லாந்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

    ஆந்திராவில் தொடங்கும் சீயான் 61 பட ஷூட்.. தீபாவளிக்கு வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!?

    இந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சென்னை மவுண்ட் ரோட்டில் சில காட்சிகளை படமாக்கினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட இயக்குனர் வினோத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.

    இந்தாண்டு தீபாவளியையொட்டி துணிவு திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றதால், துணிவு திரைப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வரவுள்ளது.

    அழகில் அசத்துறியே ஜாஸ்மின்னு... ரம்யா பாண்டியன் அசத்தல் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்

    இதேபோன்று விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித்-விஜய் படங்கள் நேருக்கு நேராக மோதுகின்றன.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith, Kollywood