ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்

துணிவு படத்தில் அஜித்

துணிவு படத்தில் அஜித்

பொங்கலையொட்டி விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் திரைக்கு வரவுள்ள நிலையில், வாரிசு படத்திற்கு முன்னதாக ரிலீஸ் தேதியை துணிவு படக்குழு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பொங்கலையொட்டி விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் திரைக்கு வரவுள்ள நிலையில், வாரிசு படத்திற்கு முன்னதாக ரிலீஸ் தேதியை துணிவு படக்குழு அறிவித்துள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் என இரு படங்களும் சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டிருந்தன. இருப்பினும், தேதியை அறிவிப்பதில் இரு படக்குழுவினருமே தாமதம் காட்டி வந்தனர். இந்நிலையில் ஜனவரி 11 ஆம் தேதி புதன் கிழமை துணிவு திரைப்படம் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

துணிவு படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் இந்த ட்ரெய்லர் 50 மில்லியன் வியூஸ்களையும், 14 லட்சம் லைக்ஸையும் தாண்டியிருக்கிறது. துணிவு ட்ரெய்லரின்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால், விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு துணிவு படக்குழுவினர் காத்திருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்த சூழலில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. இதிலும், வாரிசு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஜனவரி 11ஆம் தேதி புதன்கிழமை துணிவு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

துணிவு படத்தில் அஜித் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமிர், பாவ்னி உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஜிப்ரான் இசையில் துணிவு படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்துள்ளன.

இதையடுத்து வாரிசு படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இன்று வெளியான வாரிசு படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

First published:

Tags: Thunivu