ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘ஆலுமா டோலுமா’வை தொடர்ந்து துணிவு படத்தில் அஜித்துக்கு பாடிய அனிருத்… எப்போது ரிலீஸ் தெரியுமா?

‘ஆலுமா டோலுமா’வை தொடர்ந்து துணிவு படத்தில் அஜித்துக்கு பாடிய அனிருத்… எப்போது ரிலீஸ் தெரியுமா?

பாடலாசிரியர் வைசாக், அனிருத், ஜிப்ரான்

பாடலாசிரியர் வைசாக், அனிருத், ஜிப்ரான்

இசையமைப்பாளர் அனிருத் ஏற்கனவே நடிகர் அஜித்தின் வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.

  நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் கடந்த 11ஆம் தேதி முடிவடைந்தன.

  இதன் பின் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வந்தன. இதில் நடிகர் அஜித் நவம்பர் 3-ம் தேதி டப்பிங் பணிகளை முடித்தார். இதையடுத்து பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  இந்த நிலையில் இசை அமைப்பாளர் ஜிப்ரான் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதில் வைசாக் என்பவர் எழுதிய Chilla Chilla என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார் என தெரிவித்துள்ளார்.  அத்துடன் துணிவு திரைப்படத்தின் ஆடியோ உரிமையை Zee நிறுவனம் பெற்றுள்ளது.

  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஷ்ணு விஷால்…

  இந்த பாடல் இந்த மாதம் சிங்கிள் ட்ராக் முறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இசையமைப்பாளர் அனிருத் ஏற்கனவே நடிகர் அஜித்தின் வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

  அதில் வேதாளம் திரைப்படத்தில் ஆலுமா டோலுமா என்ற பாடலை அவரே பாடியிருந்தார்.  அந்த பாடல் அஜித்திற்கு பெரும் வெற்றியை பெற்று தந்தது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திலும் அனிருத் பாடியிருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

  வேள்பாரி நாவலை படமாக்கும் ஷங்கர்... உறுதிப்படுத்திய பிரபல இயக்குநர்!

  பொங்கலையொட்டி துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது. இந்த பொங்கலையோட்டி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் திரைக்கு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Ajith