ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாஸான போஸ்டருடன் வருது துணிவு அப்டேட்.. ட்விட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்!

மாஸான போஸ்டருடன் வருது துணிவு அப்டேட்.. ட்விட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்!

துணிவு

துணிவு

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து முடித்துவிட்டு, துணிவு படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அஜித்தின் துணிவு படம் குறித்து இன்று வெளிவந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி, அமீர், பாவ்னி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக துணிவு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் நிறைவு பெற்று டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு, துணிவு படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.  வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இந்தப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.

    தீபாவளிக்கு ரிலீஸான சர்தார், ப்ரின்ஸ்.. 4 நாட்கள் வசூல் விவரம் இதுதான்…!

    1987 - இல் பஞ்சாபில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘துணிவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கு துணிவு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடர்ச்சியாக தள்ளிக் கொண்டே சென்றதால், துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

    கசிந்துருகும் காதல்.. ரொமான்டிக் படங்கள் பிடிக்குமா? அமேசான் ப்ரைமில் உள்ள சூப்பரான லவ் மூவிஸ்!

    எச். வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இணைந்து பணியாற்றிய ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசை அமைக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக சென்னை மவுண்ட் ரோட்டில் துணிவு படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையொட்டி வெளியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    துணிவு படத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக 2 போஸ்டர்கள் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியான பொங்கல் ரிலீஸ் அப்டேட்டுடன் அட்டகாசமான 3ஆவது போஸ்டர் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith, Ajithkumar