ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சென்னை விமான நிலையத்தில் அஜித்... வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

சென்னை விமான நிலையத்தில் அஜித்... வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

அஜித்

அஜித்

அஜித் ட்ரிப் சென்ற படங்களும் வீடியோக்களும் இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் அஜித்தின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. 

  நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இதற்கிடையே துணிவு படத்தின் டைட்டில் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இது ஒருபுறமிருக்க, பைக் பிரியரான அஜித் இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் அஜித்துடன் கலந்துக் கொண்டார். அந்தப் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
   
  View this post on Instagram

   

  A post shared by Ajith Network (@ajithnetwork_page)  7 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ரிலீசாகும் 'இடம் பொருள் ஏவல்'!

  இதையடுத்து அஜித் தனது 62-வது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒன்றரை ஆண்டுகள் சர்வதேச பைக் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் நடிகர் அஜித் இருக்கும் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Ajith