ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ajith: அஜித்துடன் அர்ஜுன்... உருவாகிறதா மங்காத்தா?

Ajith: அஜித்துடன் அர்ஜுன்... உருவாகிறதா மங்காத்தா?

அஜித் - அர்ஜுன்

அஜித் - அர்ஜுன்

அஜித் மற்றும் விஜய்யை வைத்து 'மங்காத்தா 2' படத்தை இயக்கும் யோசனையில் இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அஜித்துடன் அர்ஜுன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம், மங்காத்தா 2 படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், 'மங்காத்தா' படத்தில் தன்னுடன் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனை சந்தித்துள்ளார். நடிகை ஷாலினி அஜித்குமார் தனது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அதிலிருந்து அஜித் மற்றும் ஷாலினியின் அழகான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அஜித்துடன் அர்ஜுன் இருக்கும் மற்றொரு படமும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் சூப்பர்ஹிட் படமான 'மங்காத்தா' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று, பல வருடங்களாக ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அஜித் மற்றும் அர்ஜுனின் இந்த லேட்டஸ்ட் படம் மீண்டும் ரசிகர்களிடையே அந்த ஆசையை தூண்டியுள்ளது. அஜித் மற்றும் விஜய்யை வைத்து 'மங்காத்தா 2' படத்தை இயக்கும் யோசனையில் இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருந்தார். மேலும் ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்க இரு நட்சத்திரங்களின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஏர்போர்ட்டில் கமல் ஹாசன்... வைரலாகும் படங்கள்!

    'மங்காத்தா' படத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. த்ரிஷா, ராய் லக்ஷ்மி, அஞ்சலி, ஆண்ட்ரியா ஜெர்மியா, வைபவ் ரெட்டி மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் தொடர்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Arjun, Ajith