Home /News /entertainment /

அஜித்தின் அடுத்தப்பட இசையமைப்பாளர் அனிருத்...?

அஜித்தின் அடுத்தப்பட இசையமைப்பாளர் அனிருத்...?

அஜித், அனிருத்

அஜித், அனிருத்

வலிமை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்தின் அடுத்தப் படத்துக்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

  • News18
  • Last Updated :
அஜித்தின் 61 வது படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் யார் என்பது அனேகமாக முடிவாகியுளள்ளது.

மாஸ் நடிகர்களின் முன்னுள்ள பிரமாண்ட கேள்வி, யார் இயக்கத்தில் நடிப்பது? அஜித்துக்கு இந்த கவலையில்லை. சிறுத்தை சிவா அவரை வைத்து வீரம் படத்தை எடுத்தார். நன்றாக படத்தை எடுக்கிறார், சொல்படி கேட்கிறார், யாரையும் படுத்துவதில்லை. அதனால், அவரது இயக்கத்தில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக மூன்று படங்கள் நடித்தார். உலக வரலாற்றில் ஒரே இயக்குனருடன் தொடர்ச்சியாக ஒரு நடிகர் மூன்று படங்கள் நடிப்பதெல்லாம் சாதனை.

அதன் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வையில் நடித்தார். போனி கபூர் தயாரிப்பு. அடுத்து வலிமையிலும் அதே கூட்டணி. வலிமை வெளியாவதற்குள், போனி கபூர் அடுத்தப் படமும் அஜித்துடன்தான், இயக்குனர் அதே ஹெச்.வினோத் என்றார். நடுவில் சில குளறுபடிகள் நடந்தன. தயாரிப்பாளர், இயக்குனர் மாறலாம் என்றனர். ஆனால், அதெல்லாம் வதந்தி. அதே போனி கபூர், அதே வினோத்தான் அஜித்தின் அடுத்தப் படத்துக்கும். தற்போது இசையமைப்பாளர் யார் என்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள்.

Also read... சிகாகோ சர்வதேச திரைப்பட விழாவில் டொவினோ தாமஸின் களை திரைப்படம்!

வலிமை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்தின் அடுத்தப் படத்துக்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா என்று அஜித் ரசிகர்களை ஆடவிட்டவர் இவர். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Ajith, Anirudh

அடுத்த செய்தி