அஜித் ரசிகர்களுக்கு பிரபல தியேட்டர் தரும் டபுள் ட்ரீட்!

விஸ்வாசம் படம் நாளை வெளியாகவுள்ளதை அடுத்து நடிகர் அஜித் குறித்த ஸ்பெஷல் வீடியோ ஒன்று தயாராகி வருவதாகவும், முதல் காட்சியின்போது அதை திரையிடப்போவதாகவும் நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் அறிவித்துள்ளது.

news18
Updated: January 9, 2019, 7:23 PM IST
அஜித் ரசிகர்களுக்கு பிரபல தியேட்டர் தரும் டபுள் ட்ரீட்!
விஸ்வாசத்தில் அஜித்
news18
Updated: January 9, 2019, 7:23 PM IST
விஸ்வாசம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியின்போது அஜித் குறித்த ஸ்பெஷல் வீடியோவை திரையிடப்போவதாக நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் நாளை திரைக்கு வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக விஸ்வாசம் படம் தயாராகியுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒன்றரை வருடத்திற்கு பிறகு அஜித் படம் வெளியாவதால் படத்தை வரவேற்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது திரையரங்க உரிமையாளர்களும் தங்கள் பங்கிற்கு காத்திருக்கின்றனர். விஜய், அஜித், ரஜினி என யார் படம் வந்தாலும் நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்கள் கூடி கொண்டாடுவது வெகு விமரிசையாக நடக்கும். கட் அவுட், பால் அபிஷேகம் என ரசிகர்கள் தங்களுடைய நடிகர்கள் படம் வரும் போது அதகளம் செய்வர். அதற்கு ஈடாக நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கும் ரசிகர்களை மகிழ்விக்க புது புது விஷயங்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

விஸ்வாசம் படம் நாளை வெளியாகவுள்ளதை அடுத்து நடிகர் அஜித் குறித்த ஸ்பெஷல் வீடியோ ஒன்று தயாராகி வருவதாகவும், முதல் காட்சியின் போது அதை திரையிடப்போவதாகவும் நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்

Also see:  பேட்டையா? விஸ்வாசமா?... ரசிகர்களின் சாய்ஸ்  எது?
First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...