Home /News /entertainment /

Valimai Trailer : யூடியூபில் புதிய உச்சம் தொட்ட வலிமை ட்ரெய்லர்...

Valimai Trailer : யூடியூபில் புதிய உச்சம் தொட்ட வலிமை ட்ரெய்லர்...

வலிமை

வலிமை

யூடியூபில், வலிமை பட ட்ரெய்லர் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் சோனி மியூசிக் சவுத் ஆகிய 2 சேனல்களில் வெளியிடப்பட்டது.

    வெளிவந்த 11 நாட்களிலேயே அஜித் குமாரின் வலிமை பட ட்ரெய்லர் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. படம் வெளியாவது தாமதம் அடைந்தாலும், ரசிகர்கள் தற்போது ட்ரெய்லரை பார்த்தே திருப்தி கொள்கின்றனர்.

    திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என கொரோனா பரவலைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. இதன் காரணமாக ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர்., பீம்லா நாயக் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

    வலிமை படத்தின் ரிலீஸ் ஜனவரி 13-ம்தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வலிமையும் தள்ளிப்போகும் என தகவல்கள் பரவின. அதேநேரம் படத்தை ஜனவரி 13-ம்தேதி ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளர் தரப்பு உறுதியுடன் இருப்பதாக தகவல் பரவியது.

    Also Read : வலிமை படத்தின் பின்னணி இசையை மேற்கொள்ளும் ஜிப்ரான்- நடந்தது என்ன?

    இந்த நிலையில், கடந்த வியாழன் அன்று வலிமை பட ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதற்கிடையே, கடந்த மாதம் 30-ம்தேதி வெளியான வலிமை படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூடியூபில், வலிமை பட ட்ரெய்லர் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் சோனி மியூசிக் சவுத் ஆகிய 2 சேனல்களில் வெளியிடப்பட்டது.

    Zee Studios:


    தற்போது ஒட்டுமொத்தமாக வலிமை ட்ரெய்லர் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதேபோன்று லைக்குகளும் விரைவில் 2 மில்லியனை தாண்டவுள்ளன.

    Sony Music South :


    தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் போதுதான் வலிமை படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில் கொரோனா மூன்றாவது அலை மார்ச் மாதத்தில் குறையத் தொடங்கும் என்று கூறப்படுவதால் வலிமை மார்ச் இறுதியில் வெளியாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Valimai

    அடுத்த செய்தி