ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பக்கா ப்ளானில் போனிகபூர்.. கண்டிப்பாக துணிவு படம் லாபம்தான்.. ட்ரைலரை வைத்து கணக்குபோட்ட சினிமா விமர்சகர்கள்!

பக்கா ப்ளானில் போனிகபூர்.. கண்டிப்பாக துணிவு படம் லாபம்தான்.. ட்ரைலரை வைத்து கணக்குபோட்ட சினிமா விமர்சகர்கள்!

அஜித் குமார்

அஜித் குமார்

ஃபிளாஸ்பேக் காட்சிகளை தவிர்த்துவிட்டால் படம் ஒரே லொகேஷனில் படமாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

வினோத் இயக்கத்தில அஜித் குமார் நடித்த துணிவு படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்துவருகிறது. வாரிசு படத்துடன் துணிவு படம் வெளியாவதால் விஜய் ரசிகர்களும் டிரெய்லரைக் காண ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் வெளியான டிரெய்லர் பரபரப ஆக்சன் காட்சிகள், அஜித்தின் பஞ்ச் வசனங்கள் என அஜித் ரசிகர்களுக்கு நியூ இயர் டிரீட்டாக அமைந்தது. இதனையடுத்து துணிவு டிரெய்லர் 16 மணி நேரத்தில் 18 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. தற்போது வெளியான டிரெய்லரும் அதனை உறுதி செய்திருக்கிறது. ஓடிடியின் உதவியால் மணி ஹெய்ஸ்ட் உள்ளிட்ட இதே ஜானரில் வந்த சில வெப் சீரிஸ்களை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. படம் அதனை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கேற்ப டிரெய்லரும் ஆக்சன் திரில்லர் ஜானருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

பீஸ்ட் படத்தில் மால் ஒன்றை தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இந்தப் படமும் வங்கி ஒன்றில் மக்களை பிணைய கைதிகளாக படித்துவைத்து அஜித் அண்ட் கோ எப்படி பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்ற கதையை டிரெய்லரை வைத்து யூகிக்க முடிகிறது. இரண்டு படங்களிலும் பெரும்பாலான காட்சிகள் ஒரே லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கின்றன . இந்த காரணங்களால் துணிவு டிரெய்லர் பீஸ்ட் படத்தை நியாபகப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.

சமீப காலமாக பேன் இந்தியன் படங்களின் தாக்கத்தால் பெரிய நடிகர்களின் படங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடிகர்கள் நடிப்பது வழக்கமாக இருக்கிறது. வலிமை படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்திருந்தார். பீஸ்ட் படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ, விக்ரமில் பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் இப்படி பல உதாரணங்களை சொல்லலாம். வாரிசு படத்தில் கூட பெரும் நட்சத்திர பட்டாளங்களே நடித்துவருகிறார்கள்.

அந்த வகையில் பார்க்கும்போது அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி ஆகியோர் தவிர்த்து துணிவு படத்தில் பெரும் நட்சத்திர நடிகர்கள் யாரும் இல்லை. ஃபிளாஸ்பேக் காட்சிகளை தவிர்த்துவிட்டால் படம் ஒரே லொகேஷனில் படமாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் படத்தின் பட்ஜெட் குறைவாகவே இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பொதுவாக அஜித் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கியாரண்டியாக இருக்கின்றன. அந்த அளவுக்கு அவரது படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஓபனிங்கை அளித்துவருகிறார்கள். இதனால் சின்ன கல்லு பெத்த லாபம் என்பது போல பட்ஜெட் குறைவாக உருவான துணிவு படம் மிகப்பெரிய லாபத்தை சந்திக்கும் என்பது அனைவரது கணிப்பாக இருக்கிறது.

First published:

Tags: Actor Ajith, Thunivu