ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு ட்ரெய்லர் அப்டேட்டுடன் புது வருஷம்.? பிரம்மாண்ட திட்டத்துடன் படக்குழு!

துணிவு ட்ரெய்லர் அப்டேட்டுடன் புது வருஷம்.? பிரம்மாண்ட திட்டத்துடன் படக்குழு!

அஜித் குமார்

அஜித் குமார்

நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை என அஜித்தின் கருத்தைக் குறிப்பிட்டு அப்போ துணிவு நல்ல படம் இல்லையா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பிவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் குறித்த செய்திகள் தான் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. படத்துக்கு வேற லெவல் ப்ரமோஷன் ஆக அது அமைந்துவிட, துணிவு பாடல்களை மட்டும் வெளியிட்டு இப்படி சைலண்டாக இருக்கிறார்களே என அஜித் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இதனையடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, நீங்க தரையிலதான் ப்ரமோஷன் பண்ணுவீங்க, நாங்க வானத்திலேயே புரமோஷன் பண்ணுவோம் என களமிறங்கியிருக்கிறது துணிவு படக்குழு.

துபாயில் ஸ்கை டைவ் மூலம் துணிவு படத்தின் போஸ்டரை வானில் பறக்கவைத்து விளம்பரப்படுத்தியுள்ளனர். துணிவு படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் லைகா நிறுவனம் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக வானத்தில் ஸ்கை டைவிங் செய்து போஸ்டரை பறக்கவிட்டு வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு அப்டேட் வெளியாகும் என அறிவித்தனர். இந்த செய்தி கடந்த இரண்டு நாட்களாக டிரெண்டிங்கிலிருந்து வாரிசு படத்தை ஓரம் கட்டிவிட்டது. இதைத் தானே எதிர்பார்த்தோம் என அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வருகிற 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிற அப்டேட் என்னவாக இருக்கும் ரசிகர்களிடையே கேள்வி எழுந்த நிலையில், அன்றைய தினம் துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகும் எனறு தகவல் கிடைத்துள்ளது. டிரெய்லரை மிக பிரம்மாண்டமாக துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர ஆகிய இடங்களில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியின் முந்தைய படங்களான நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குக் கூட இப்படிப்பட்ட புரொமோஷன் செய்யப்படவல்லை. இது படத்தின் மீது அப்படக்குழுவினருக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே,

மற்றொரு பக்கம் வாரிசு படத்துடன் துணிவு படம் வெளியாவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவே படத்தை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவதாகவும் விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்கின்றனர். மேலும் நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை என அஜித்தின் கருத்தைக் குறிப்பிட்டு அப்போ துணிவு நல்ல படம் இல்லையா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பிவருகின்றனர். முன்னதாக யார் நம்பர் 1 சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதனை நிரூபிக்கவே வாரிசு படத்துடன் துணிவை வெளியிட அஜித் முடிவு செய்தததாகவும் கூறப்பட்டது.

இசை வெளியீட்டு விழாவில் பேசுவது இல்லை, பேட்டி கொடுப்பதில்லை, ரசிகர்கள் சந்திப்பதில்லை இருந்த போதும் ஒவ்வொருமுறையும் அஜித் படங்கள் வெளியாகும் நல்ல ஓபனிங் கிடைத்துவருகிறது. அது தான் அஜித்தின் பலம் என பதிலுக்கு அவரது ரசிகர்களும் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பொங்கல் விடுமுறையில் வருவதால் இரண்டு படங்களையும் காண மக்கள் ஆர்வம் காட்டுவர். குறைந்தது ஒரு வாரத்துக்கு திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போனி கபூர் தயாரித்துள்ள துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், அமீர், பாவனி, பக்ஸ் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் நீரவ் ஷா தான் ஒளிப்பதிவாளர். ஆனால் முதல் இரண்டு படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த நிலையில் துணிவுக்கு ஜிப்ரான் இசையமைத்தார். வலிமை படத்தின் பின்னணி இசையையும் ஜிப்ரான் தான் கவனித்தார்.

வலிமை படத்தின் போது யுவனுக்கும் இயக்குநர் வினோத்துக்கும் இடையே உருவான கருத்து வேறுபாடு காரணமாகவே ஜிப்ரான் இசையமைத்தார் என்று கூறப்படுகிறது. வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கும் ஜிப்ரானின் இசை பக்கபலமாக அமைந்தது. இருப்பினும் துணிவு பாடல்களைப் பொறுத்தவரை கலவையான விமர்சனங்களே கிடைத்துவருகின்றன.

2023 ஆம் ஆண்டு வருடத்தின் துவக்கத்திலேயே துணிவு மற்றும் வாரிசு என இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாவதால் திரையுலகினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

First published:

Tags: Actor Ajith, Dubai, Thunivu