ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரியல் ஆட்ட நாயகன் ! வாரிசு டிரெய்லரை ஓரம் கட்டிய துணிவு

ரியல் ஆட்ட நாயகன் ! வாரிசு டிரெய்லரை ஓரம் கட்டிய துணிவு

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

இதனையடுத்து அஜித் தான் ரியல் ஆட்டநாயகன் என அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஹெச்.வினோத்துடன் துணிவு படத்துக்காக 3வது முறை கைகோர்த்திருக்கிறார் அஜித். மற்றொரு பக்கம் முதன்முறையாக தெலுங்கு பட இயக்குநரான வம்சியுடன் விஜய் இணைந்திருக்கிறார். துணிவு மற்றும் வாரிசு படங்கள் வருகிற ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து சமூக வலைதங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது. மற்றொரு பக்கம் இதுவரையில்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக துணிவு படம் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான குடும்ப ரசிகர்களின் பலம் இருக்கிறது. அஜித்துக்கும் வீரம், வேதாளம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஃபேமிலி சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த கதையைத் தேர்ந்தெடுத்து வருகிறார். இதன் காரணமாக விஸ்வாசம் படம் மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்தது.

வாரிசா? துணிவா? என டிரெய்லரை வைத்து முடிவு செய்யலாம் என்றால் இரண்டு படங்களின் டிரெய்லரும் ரசிகர்களைப் பெரிய அளவில் கவரவில்லை என தெரிகிறது. வாரிசு பட டிரெய்லர் சீரியல் மாதிரி இருக்கிறதென அஜித் ரசிகர்களும், துணிவு டிரெய்லர் பீஸ்ட் படத்தை நியாபகப்படுத்துவதாக விஜய் ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள். பொதுவாக நடிகர் அஜித் மற்றும் விஜய் டிரெய்லர் வெளியானால் எவ்வளவு பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது என்பது போட்டியாக இருக்கும்.

அந்த வகையில் அஜித்தின் துணிவு டிரெய்லர் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றதாகவும், வாரிசு படம் 23 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜித் தான் ரியல் ஆட்டநாயகன் என அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

First published:

Tags: Actor Ajith, Thunivu, Varisu, Vijay