ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அடேங்கப்பா ! 2 கோடி வியூஸ் - சாதனைகளை முறியடிக்கும் துணிவு டிரெய்லர்

அடேங்கப்பா ! 2 கோடி வியூஸ் - சாதனைகளை முறியடிக்கும் துணிவு டிரெய்லர்

அஜித் குமார்

அஜித் குமார்

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரைலர் யூடியூப்பில் 2 கோடி பார்வையாளர்களை கடந்தது வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் டிரைலர் சனிக்கிழமை வெளியானது. தற்போது இந்த டிரைலர் யூடியூப்பில் 2 கோடி பார்வைகளை கடந்து அதிகம் வைரலாகி வருகிறது.

முன்னதாக வாரிசு படத்துடன் துணிவு படம் வெளியாவதால் விஜய் ரசிகர்களும் டிரெய்லரைக் காண ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் வெளியான டிரெய்லர் பரபரப ஆக்சன் காட்சிகள், அஜித்தின் பஞ்ச் வசனங்கள் என அஜித் ரசிகர்களுக்கு நியூ இயர் டிரீட்டாக அமைந்தது.

வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. தற்போது வெளியான டிரெய்லரும் அதனை உறுதி செய்திருக்கிறது. ஓடிடியின் உதவியால் மணி ஹெய்ஸ்ட் உள்ளிட்ட இதே ஜானரில் வந்த சில வெப் சீரிஸ்களை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. படம் அதனை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கேற்ப டிரெய்லரும் ஆக்சன் திரில்லர் ஜானருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

பீஸ்ட் படத்தில் மால் ஒன்றை தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். அவர்களிடமிருந்து மக்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இந்தப் படமும் வங்கி ஒன்றில் மக்களை பிணைய கைதிகளாக படித்துவைத்து அஜித் அண்ட் கோ எப்படி பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்ற கதையை டிரெய்லரை வைத்து யூகிக்க முடிகிறது. இரண்டு படங்களிலும் பெரும்பாலான காட்சிகள் ஒரே லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கின்றன . இந்த காரணங்களால் துணிவு டிரெய்லர் பீஸ்ட் படத்தை நியாபகப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.

இருப்பினும் துணிவு பட டிரெய்லர் யூடியூபில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. டிரெய்லர் வெளியான 20 மணி நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதன் காரணமாக வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியானால் துணிவு படத்தின் இச்சாதனையை முறியடிக்குமா என்பது அனைவரது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

First published:

Tags: Actor Ajith, Thunivu, Vinoth