ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

“Dont Act like a Hero.. அந்த வேலைய நான் பாத்துக்கறேன்..” வெளியானது துணிவு பட ட்ரெய்லர்

“Dont Act like a Hero.. அந்த வேலைய நான் பாத்துக்கறேன்..” வெளியானது துணிவு பட ட்ரெய்லர்

அஜித்

அஜித்

யார் நம்பர் 1 என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் காரசாரமாக நடைபெற்றன. இதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே இரண்டு படங்களில் எந்தப் படம் வெல்லப்போகிறது, எந்தப் படத்துக்கு அதிக வசூல் கிடைக்கப்போகிறது என உன்னிப்பாக கவனித்துவருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கிற 'துணிவு' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. துணிவு படத்துடன் நடிகர் விஜய்யின் வாரிசு படமும் வெளியாவதால் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு இல்லாத அளவுக்கு படத்தை தீவிரமாக புரமோட் செய்துவருகிறார்கள் படக்குழுவினர். அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு துபாயில் ஸ்கை டைவிங் முறையில் வானத்தில் துணிவு போஸ்டர் பறக்கவிடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வலிமை பட டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் டிரெய்லர் அதனை உறுதி செய்திருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா படமும், நடிகர் அஜித் குமாரின் வீரம் படமும் வெளியாகியிருந்தது. இரண்டு படங்களும் ரசிகர்களைப் பூர்த்தி செய்த வகையில் வெற்றிப்படமாக அமைந்தது. அந்த நிலை இந்த பொங்கலுக்கும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழில் விஜய் தான் நம்பர் 1 நடிகர், நடிகர் அஜித் அதற்கு அடுத்த இடத்தில் தான் இருக்கிறார் என்று கொளுத்திப்போட சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து யார் நம்பர் 1 என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் காரசாரமாக நடைபெற்றன. இதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே இரண்டு படங்களில் எந்தப் படம் வெல்லப்போகிறது, எந்தப் படத்துக்கு அதிக வசூல் கிடைக்கப்போகிறது என உன்னிப்பாக கவனித்துவருகிறது.

துணிவு டிரெய்லரை பார்க்க...

' isDesktop="true" id="865494" youtubeid="jnBZboK17_A" category="cinema">

...

அந்த வகையில் துணிவு டிரெய்லர், படம் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

First published:

Tags: Actor Ajith, Thunivu