துணிவு படத்திலிருந்து முதல் பாடல் எப்போது வெளியாகும் என்ற அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதேசமயம் சில பேட்ச் ஒர்க் காட்சிகளையும் எடுத்து வந்தனர். தற்போது படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்று வெளியிட்டிற்கு துணிவு தயாராகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் அதிக தாடியுடன், வெள்ளை நிற முடியுடனும் நடித்து வந்தார். அந்த தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. மேலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக அதே தோற்றத்தில் நடிகர் அஜித் வலம் வந்தார். குறிப்பாக, குடும்பத்தினருடன் வெளிநாடு சென்ற போதும் அதே தோற்றத்தில்தான் இருந்தார் அஜித்.
மறைந்த நடிகர் ஹரி வைரவன் குழந்தைகளின் கல்விக்கு உதவிய விஷ்ணு விஷால்!
இதையடுத்து க்ளீன் சேவ் செய்த அஜித்குமாரின் தோற்றம் சமீபத்தில் வைரலானது இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டுள் கழித்து தன்னுடைய தோற்றத்தை அஜித்குமார் மாற்றினார். அதற்கான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படியாக அஜித்தின் புகைப்படங்கள்தான் வைரலாகி வந்ததேதவிர படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
The Wait is over! 💥 #ChillaChilla is coming to rule your Playlist 😉 from December 09#ChillaChillaFromDec9 #ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl @RedGiantMovies_ @Kalaignartv_off @NetflixIndia pic.twitter.com/3ommR06X16
— Boney Kapoor (@BoneyKapoor) December 5, 2022
இந்த நிலையில் துணிவு படத்திலிருந்து முதல் பாடலாக ‘சில்லா சில்லா’ என்ற பாடல் வரும் 9ஆம் தேதி வெள்ளியன்று வெளியாகவுள்ளது. ஜிப்ரான் இசையில் வைஷாக் எழுதியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
அஜித்குமார் நடித்த வரும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.
வாரிசு.. துணிவு? யார் பேனர் பெருசு? போட்டி போட்டுக்கொண்டு பேனர் வைத்த விஜய்- அஜித் ரசிகர்கள்!
இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பாவ்னி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Kollywood