ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்தில் நீக்கப்பட்ட சர்ச்சை வார்த்தைகள் இவைதான்! - ரன் டைம் எவ்வளோ தெரியுமா?

துணிவு படத்தில் நீக்கப்பட்ட சர்ச்சை வார்த்தைகள் இவைதான்! - ரன் டைம் எவ்வளோ தெரியுமா?

அஜித் குமார்

அஜித் குமார்

வடமாநிலத்தவர்களை வடக்கான்ஸ் என்று கூறும் விமர்சனம் தமிழகத்தில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வங்கிக் கொள்ளை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஷன் திரில்லர் படமாக நடிகர் அஜித்தின் துணிவு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வந்த டிரெய்லர் அதனை உறுதி செய்துள்ளது. நடிகர் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கேற்ப படத்தில் ஏகப்பட்ட வன்முறை காட்சிகளும், ஆபாச வசனங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நடிகர் அஜித் எதிர்மறை வேடத்தில் நடித்த மங்காத்தா படத்திலும் கெட்ட வார்த்தைகள் பேசியிருந்தார்.

இந்த நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தின் தணிக்கை சமீபத்தில் நடைபெற்றது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ஆபாச வார்த்தைகளையும், வடக்கான்ஸ் என்ற வார்த்தையையும் மியூட் செய்ய கூறியுள்ளனர். இந்த நிலையில் தணிக்கை குழு கூறிய வார்த்தைகளை படக்குழுவினர் மியூட் செய்துள்ளனர். அதேபோல் வடகான்ஸ் என்ற வார்த்தையை மாற்றியுள்ளனர்.

வடமாநிலத்தவர்களை வடக்கான்ஸ் என்று கூறும் விமர்சனம் தமிழகத்தில் உள்ளது. அந்த வார்த்தையை தற்போது வேறு பொருள் தரும் வகையில் மாற்றியுள்ளனர். துணிவு திரைப்படத்தின் தணிக்கை குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதில் இந்த வடகான்ஸ் என்ற வார்த்தை நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. துணிவு திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதை பட குழு விரைவில் அறிவிக்கும். துணிவு திரைப்படம் 2 மணி நேரம் 25 நிமிடம் 48 நொடிகள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதும் தணிக்கை விவரத்தில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காசேதான் கடவுளடா பாடலில் காந்திக்கும் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப் படத்துக்கு அனைவரும் பார்க்கும் வகையில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 2 மணி நேரம் 26 நிமிடங்கள் ஓடக் கூடியது.

சமீபத்தில் வெளியான துணிவு டிரெய்லர் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. பீஸ்ட் படத்தில் மால் ஒன்றை தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். அவர்களிடமிருந்து மக்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இந்தப் படமும் வங்கி ஒன்றில் மக்களை பிணைய கைதிகளாக படித்துவைத்து அஜித் அண்ட் கோ எப்படி பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்ற கதையை டிரெய்லரை வைத்து யூகிக்க முடிகிறது. இரண்டு படங்களிலும் பெரும்பாலான காட்சிகள் ஒரே லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கின்றன . இந்த காரணங்களால் துணிவு டிரெய்லர் பீஸ்ட் படத்தை நியாபகப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.

First published:

Tags: Actor Ajith, Boney Kapoor, Thunivu