அஜித்தின் துணிவு படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கேன், தர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
துணிவு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அஜித் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ஏகே 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாகவும், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் அடுத்தடுத்து தகவல் வெளியான வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் ஏகே 62 படத்தின் முழு கதையையும் விக்னேஷ் சிவன் தயார் செய்யாதது லைக்கா நிறுவனத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொண்டதாகவும், கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் அல்லது விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
#WorldOfThunivu THE MAKiNG 🙌#Thunivu #ThunivuHugeBlockbusterworldwide 💥 #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures @mynameisraahul @ghibranofficial @shabirmusic pic.twitter.com/CAi28izgJw
— Boney Kapoor (@BoneyKapoor) January 28, 2023
ஏகே 62 படம் பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்க துணிவு படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். படம் வெளியாவதற்கு முன் படத்தில் சண்டைக்காட்சிகளில் அஜித்துக்கு பதிலாக டூப் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் மேக்கிங் வீடியோவில் சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்துவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith