ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜிகர்தண்டா ஒருபக்கம்.. துணிவு படம் மறுபக்கம்.. பாலமேடு ஜல்லிக்கட்டில் 'துணிவு' வில்லன்!

ஜிகர்தண்டா ஒருபக்கம்.. துணிவு படம் மறுபக்கம்.. பாலமேடு ஜல்லிக்கட்டில் 'துணிவு' வில்லன்!

அஜித் - பாலமேடு ஜல்லிக்கட்டில் துணிவு வில்லன் ஜான் கொக்கேன்

அஜித் - பாலமேடு ஜல்லிக்கட்டில் துணிவு வில்லன் ஜான் கொக்கேன்

குறிப்பாக துணிவு படத்தை மதுரை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு இன்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்போட்டி பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அமைச்சர் மூரத்தி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார். போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு கார், பைக், சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் துணிவு படத்தில் வில்லனாக நடித்துள்ள ஜான் கொக்கேன் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தனது மனைவி பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட குடும்பத்துடன் வருகை தந்தார். நடிகர் அஜித்தின் வீரம் படத்திலும் ஜான் கொக்கேன் நடித்திருந்தார். இதனிடையே பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த அவருக்கு அஜித் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, எங்கள் முதல் ஜல்லிக்கட்டு அனுபவத்துக்கு நன்றி மதுரை. நானும் என் மனைவி பூஜா ராமச்சந்திரன் பொங்கலைக் காண பாலமேடு வந்து ஜல்லிக்கட்டை கண்டு மகிழ்ந்தோம். மேலும் மதுரை உணவையும், ஜிகர்தண்டாவையும் சாப்பிட்டு மகிழ்ந்தோம். குறிப்பாக துணிவு படத்தை மதுரை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 மாடுகளைப் பிடித்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் மாடு முட்டியதில் காயமடைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அரவிந்த்ராஜன் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஜான் கொக்கேன் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டினார். சார்பட்டா பரம்பரையைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் துணிவு படமும் அவரை ரசிகர்களிடையே பிரபலமாக்கியிருக்கிறது.

First published:

Tags: Actor Ajith, Jallikattu, Thunivu