ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு ஃபரஸ்ட் ஆஃப் இப்படித்தான் இருக்கும் - சீக்ரெட் சொன்ன வினோத்

துணிவு ஃபரஸ்ட் ஆஃப் இப்படித்தான் இருக்கும் - சீக்ரெட் சொன்ன வினோத்

வினோத் - அஜித் குமார்

வினோத் - அஜித் குமார்

இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையே மோதல் ஏற்படக்கூடாது என வெவ்வேறு நேரங்களில் முதல் காட்சிகள் திரையிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3வது முறையாக கைகோர்த்திருக்கும் படம் துணிவு. இந்தப் படம் வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் தொடர்பாக இயக்குநர் வினோத் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் பிரமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர். இருவரும் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி  டிரெண்டாகிவருகிறது. துணிவு பட டிரெய்லரில் வரும் போட் காட்சியில் அஜித்துக்கு பதிலாக டூப் நடிகர் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை உருவானது. இதனை மஞ்சு வாரியர் மறுத்தார். அஜித் தான் அந்தக் காட்சியில் நடித்ததாகவும், தனக்கும் அவர் சொல்லிக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய வினோத், துணிவு பட முதல் பாதி மட்டுமே அஜித் ரசிகர்களுக்கான படமாக இருக்கும், இரண்டாம் பாதி எல்லா ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும் என்று தெரிவித்தார். வங்கிக் கொள்ளை அடிப்படையாகக் கொண்டு முழு படமும் உருவாகவில்லை. அது படத்தின் ஒரு பகுதிதான். படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் என்னிடம் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் படம் தொடர்பாக நிறைய புரமோ வீடியோக்களை வெளியிட்டால் படம் பார்க்கும்போது உங்களுக்கு சஸ்பென்ஸ் இருக்காது. என்றார்.

துணிவு படம் திரையரங்குகளில் வெளியான பிறகு அடுத்த மாத இறுதியில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென், பக்ஸ், தர்ஷன், பிக்பாஸ் அமீர், பாவனி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படுகிறது. மற்றொரு பக்கம் விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனம் முடிவெடுத்துள்ளன. இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையே மோதல் ஏற்படக்கூடாது என வெவ்வேறு நேரங்களில் முதல் காட்சிகள் திரையிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Actor Ajith, Thunivu