ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித்தின் துணிவு முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் துணிவு முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித் குமார்

அஜித் குமார்

Thunivu box office collection day 1: இந்தியாவில் முதல் நாளில் ரூ. 26 கோடி வசூலித்ததாக தெரிகிறது. இது வாரிசு படத்தை விட ரூ.50 லட்சம் குறைவாக பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Ajith Thunivu box office collection day 1: அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் 26 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படம் நேற்று வெளியானது. இதோடு விஜய்யின் வாரிசு படமும் வெளியானது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். வெளியான இரண்டு படங்களுமே பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. எச்.வினோத் இயக்கிய, ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படமான துணிவு, இந்தியாவில் முதல் நாளில் ரூ. 26 கோடி வசூலித்ததாக தெரிகிறது. இது வாரிசு படத்தை விட ரூ.50 லட்சம் குறைவாக பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் துணிவு படத்தின் வசூல் அதிகமாக இருந்தது. வாரிசு இங்கு ரூ.17 கோடி சம்பாதித்த நிலையில், துணிவு ரூ.18 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் ரூ.3.5 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.2.5 மற்றும் ரூ.3 கோடியும், கேரளாவில் ரூ.1.5 கோடியும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூ.50 லட்சமும் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால், இந்த வசூல் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பாலிவுட் பிரபலம்!

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்தது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Thunivu