ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீயாய் நடக்கும் டப்பிங் வேலை.. பொங்கல் ரேஸுக்கு தயாராகும் அஜித்தின் துணிவு!

தீயாய் நடக்கும் டப்பிங் வேலை.. பொங்கல் ரேஸுக்கு தயாராகும் அஜித்தின் துணிவு!

துணிவு

துணிவு

பொங்கலுக்கு படம் ரிலீசாகவுள்ள நிலையில் பரபரவென வேலைகளை செய்து வருகிறார் இயக்குநர் வினோத்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அஜித்தின் துணிவு படம் குறித்து வெளிவரும் அடுத்தடுத்த தகவல்களால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பொங்கல் ரிலீசுக்காக படக்குழு தீயாய் வேலை செய்து வருகிறது

  அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி, அமீர், பாவ்னி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  விக்ரம் படத்தின் 100வது நாள்.. கலைவாணர் அரங்கில் கொண்டாட்டத்துக்கு தயாராகும் படக்குழு!

  கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக துணிவு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் நிறைவு பெற்று தற்போது டப்பிங் பணிகள் தீயாய் நடந்து வருகிறது. தினமும் படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் டப்பிங்கை முடித்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். பொங்கலுக்கு படம் ரிலீசாகவுள்ள நிலையில் பரபரவென வேலைகளை செய்து வருகிறார் இயக்குநர் வினோத்.

  விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு விளம்பர வேலைகளில் படக்குழு இறங்கும் என தெரிகிறது.

  1987 - இல் பஞ்சாபில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘துணிவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கு துணிவு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடர்ச்சியாக தள்ளிக் கொண்டே சென்றதால், துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. பொங்கலுக்கு விஜயின் வாரிசு படமும் வெளியாகவுள்ளதால் வரும் பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு செம ஹேப்பியாகவே இருக்குமென தெரிகிறது.

  எச். வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இணைந்து பணியாற்றிய ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசை அமைக்கிறார். துணிவு படத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக 2 போஸ்டர்கள் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியான பொங்கல் ரிலீஸ் அப்டேட்டுடன் அட்டகாசமான 3ஆவது போஸ்டர் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actor Ajith