Home /News /entertainment /

அஜித்தின் ஏகே 61 படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

அஜித்தின் ஏகே 61 படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

அஜித்

அஜித்

AK 61 Release : தீபாவளியையொட்டி கார்த்தியின் சர்தார், ஜெயம் ரவியின் இறைவன், சிவகார்த்தி கேயனின் ப்ரின்ஸ் ஆகியவை ரிலீசாகவுள்ளன.

    அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 61 படத்தின் ரிலீஸ் தள்ளப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அஜித்தின் கடின உழைப்பில் உருவான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்த படத்தை சூப்பர் ஹிட்டாக்க படக்குழுவினர் தீயாய் வேலை செய்து வருகின்றனர்.

    இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஏகே 61 என்பது ஒர்க்கிங் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. வலிமை படத்தை இயக்கிய எச். வினோத் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார்.

    ஏகே 61 படத்தில் வங்கிக் கொள்ளை என்பது முக்கிய காட்சிகளாக அமையும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் மவுண்ட் ரோடு போன்று ஐதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

    இதையும் படிங்க - விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தை 400 திரையரங்குகளில் வெளியிட முயற்சி!

    தொடர்ச்சியாக ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிறைவு பெற்றது.

    இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இடைப்பட்ட இந்த நாட்களில் அஜித் தனது  சூப்பர் பைக்குடன் ஐரோப்பாவை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    தற்போது அஜித் இடம்பெறாத காட்சிகளை எச்.வினோத் படமாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க - விஜய்யின் தளபதி 66 பட டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…

    முன்னதாக தீபாவளியை குறிவைத்து ஏகே 61 படத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் வெளியீடு டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

    தீபாவளியையொட்டி கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார், ஜெயம் ரவியின் இறைவன், சிவகார்த்தி கேயனின் ப்ரின்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எச். வினோத் உடனான படத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருந்த இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith

    அடுத்த செய்தி