Ajith: சாகச மன்னன் அஜித்... ‘தல’யின் தனிவழி

Ajith: சாகச மன்னன் அஜித்...  ‘தல’யின் தனிவழி

அஜித்

நடிகர் அஜித் தமிழக அளவிலான 46-வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்சிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

  • Share this:
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் என்றாலும் நடிப்புக்கு அடுத்தபடியாக அஜித்தின் அடையாளமாக இருப்பது ரேஸிங். ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தும் அளவு வாகனங்கள் மீது அஜித்துக்கு கிரேஸ் இருந்தது.

புது நூற்றாண்டின் தொடக்கத்தில் தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்த அஜித், தீடீரென படங்களில் நடிப்பதை குறைத்துகொண்டு ரேஸிங் பக்கம் சென்றார். குறுகிய காலத்தில் பயிற்சி பெற்று 2002-ம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற ஃபார்முலா மாருதி சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் 4-ம் இடம் பிடித்தது ரேஸிங் வல்லுநர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

பைக், காரோடு நிறுத்திக்கொள்ளாமல் சிறிய ரக ஹெலிகாப்டர்களை பிரித்து, கலைத்து மறுபடியும் அதை அசெம்பல் செய்து பறக்க விடுவதும் அஜித்துக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று. ஃபைட்டர் ஜெட் இயக்கக்கூடிய அளவு பயிற்சி பெற்றிருக்கும் அஜித், பைலட் லைசன்ஸ் வைத்திருக்கும் ஒரே இந்திய நடிகர் என்பதும் கூடுதல் தகவல்.

அதேபோல் ஆளில்லா விமானம் இயக்குவதில் அஜித்திடம் இருக்கும் அனுபவத்தை உணர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், தக்‌ஷா எனும் தங்களுடைய கல்லூரி மாணவ குழுவுக்கு சிறப்பு ஆலோசகராக அஜித்தை நியமனம் செய்தார்கள். அஜித் பயிற்சி அளித்த அந்த குழு, உலக அளவிலான போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்ததோடு உலகளவில் அதிக நேரம் பறந்த ட்ரோன் எனும் புது சாதனையையும் படைத்தது.



இந்த வரிசையில் தற்போது புதிதாக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்சிப் போட்டியில் 6 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் அஜித். கடந்த சில நாட்களாகவே அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை சென்னை ஃரைபிள் கிளப்பில் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது தமிழக அளவிலான 46வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்சிப் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அஜித் தங்கம் வென்றுள்ளார்.

மேலும் அஜித் தலைமையிலான சென்னை ரைபிள் கிளப் அணி மேலும் 2 பிரிவுகளில் தங்கமும், இரண்டில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர். தமிழ் சினிமாவின் தலயாக தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் அஜித் அதே வேளையில் திரைக்கு வெளியிலும் விளையாட்டு வீரராக பதக்கங்களை குவித்து வருவது அவர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: