Home /News /entertainment /

கேதார்நாத்தில் நடிகர் அஜித் தரிசனம்

கேதார்நாத்தில் நடிகர் அஜித் தரிசனம்

கேதார்நாத்தில் அஜித்

கேதார்நாத்தில் அஜித்

சிவ வைணவ ஸ்தலங்களில் தரிசனம் செய்த நடிகர் அஜித்குமார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிவ ஸ்தலமான கேதார்நாத்தில் நடிகர் அஜித் தரிசனம் செய்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கடந்த இரண்டு வாரங்களாக இமயமலை பகுதிகளில் பைக் ரைட்ஸ் சென்றுள்ளார்.

    அங்கு அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது சிவ ஸ்தலமான கேதார்நாத்திற்கு சென்று தரிசனம் செய்தார்.

    அதேபோல்  வைணவ ஸ்தலமான பத்ரிநாத்திற்கும் சென்றுள்ளார். அந்த இரு ஸ்தலங்களிலும் தரிசனத்திற்கு பிறகு அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

    Also read... பொன்னியின் செல்வன் படத்தை ட்விட்டரில் பிரபலப்படுத்தும் நடிகர்கள்!

    இமயமான பகுதிகளில் பயணித்து வரும் நடிகர் அஜித், அடுத்த வாரம் முதல் தன்னுடைய 61 வது படத்தின் இறுதி கட்டப்பட பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

    அந்தப் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் 25 நாட்கள் நடைபெறுகிறது.  அத்துடன் அந்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Ajith, Entertainment

    அடுத்த செய்தி