Home /News /entertainment /

Valimai Box Office: 4 நாளில் 150 கோடி வசூலை கடந்த வலிமை.. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..

Valimai Box Office: 4 நாளில் 150 கோடி வசூலை கடந்த வலிமை.. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..

Valimai

Valimai

Valimai Box Office Collection | யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கார்த்திகேயா கும்மகொண்டா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள வலிமை திரைப்படமானது 2022 ஆம் ஆண்டின் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.

மேலும் படிக்கவும் ...
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் 'வலிமை' திரைப்படமானது கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. போனி கபூர் தயாரித்த இப்படமானது உலகம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், தமிழகத்தில் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட திரையரங்கிலும் வெளியாகியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த "நேர்கொண்ட பார்வை" மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து இவர்கள் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படமானது 2022 ஆம் ஆண்டின் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியது. இப்படமானது வெளியான முதல் நாளிலேயே 35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

2019 இல் அறிவிக்கப்பட்ட இத்திரைப்படமானது கொரோனா பெரும்தொற்று காரணமாக படம் வெளியாவதில் தாமதமானது. மேலும் தாய் உணர்வு கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமான வலிமை தொடக்க நாட்களிலேயே ரூ.150 கோடியைத் தாண்டி இந்திய திரை உலகினர், ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

வலிமை திரைப்படம் வெளியான பிப்ரவரி 24 அன்று திரையரங்குகள் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலித்தாக புகார்கள் எழுந்தது. மேலும் ஆங்காங்கே அஜித் ரசிகர்கள் திரையங்குகளை உடைத்த சம்பவங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது.



யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கார்த்திகேயா கும்மகொண்டா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் சுமித்ரா, புகழ், முத்து மானி, என பலர் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வலிமை திரைப்படமானது 2022 ஆம் ஆண்டின் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான வலிமை படமானது வெற்றிகரமாக நான்கு நாட்கள் திரையரங்குகளில் ஓடி உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளது.

Also Read : யுவன் ஷங்கர் ராஜாவின் வெறியனான விஜய் மகன் சஞ்சய் - வைரலாகும் வீடியோ

கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வலிமை திரைப்படமானது நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ 159.75 கோடி வசூலித்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் குறிப்பிட்டுள்ளார்.



மேலும், இப்படமானது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரமாண்டமான வரவேற்பை பெற்று ஆரம்ப வார இறுதியில் ரூ 4.85 கோடி வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வலிமை திரைப்படத்துக்கு கிடைத்துள்ள வர்த்தக ரீதியான வெற்றியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் வலிமை வசூல் தொடர்பான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Actor Ajith, Entertainment, Valimai

அடுத்த செய்தி