அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அடுத்தவாரம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
உலகம் முழுவதிலுமான கடுமையான லாக்டவுன் மற்றும் தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், நடிகர் அஜித் குமாரின் 'வலிமை' படம் ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை பெருமளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல. மொழி, நாடு எனும் காரணிகளுக்கு அப்பாற்பட்டு உலகம் முழுதுமே 'வலிமை' படம் குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் உச்சத்தில் இருக்கிறது. அஜித்குமாரின் கண்கவர் திரை ஆளுமை, உயர் தொழில்நுட்பம், மற்றும் காட்சி துணுக்களில் இருந்த அதிரடி ஆக்சன் ஆகியவை படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க -
வாக்குச்சாவடியில் வருத்தம் தெரிவிக்கும் விஜய் - வைரலாகும் வீடியோ
இந்தப் படத்தை Zee Studios மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். வலிமை குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாவது-
வலிமை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் அஜித்தின் இந்திய அளவிலான, பிரமாண்ட வெளியீடுகளின் துவக்கமாக இருக்கும்
இதையும் படிங்க -
இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்யப்படும் பார்த்திபன் படம்
குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான தருணங்கள், சிறப்பான ஆக்ஷன் காட்சிகள், அஜித் குமார் மற்றும் பிற நடிகர்களின் அற்புதமான நடிப்பு என அனைத்து அம்சங்களும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.
அஜித் மிகவும் அடக்கமான நடிகர். ஒழுக்கம், தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய குணங்களில் அவர் தலைசிறந்தவர். தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் அவர். படத்தின் ஆரம்ப கட்ட பணிகளின் போது நாங்கள் எதிர்பார்த்தபடி இந்த திரைப்படத்தினை வடிவமைக்க அவர் பெரும் ஆதரவாக இருந்தார்.
வலிமை படத்தில் இயக்குநர் வினோத்தின் உழைப்பு அளப்பரியது. அவர் ஒரு பெர்பக்ஸனிஸ்ட். அவர் தான் விரும்பியதை படமாக்க எந்த எல்லைக்கும் செல்வார், ஆனால் தயாரிப்பாளர் உடன் மிகுந்த நட்புடன் இருப்பார். இந்த கடினமான சவாலான தொற்றுநோய் கால கட்டத்தில் வலிமை படத்தினை முடிக்க, ஒரு குடும்பத்தைப் போல எங்கள் ஒட்டுமொத்த குழுவினரும் இணைந்து உதவினர். அவர்களுக்கு நன்றி.
ஒரு தயாரிப்பாளராக, ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படம் வலிமை என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக, ஓடிடி தளங்கள் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையை திறந்துள்ளன, ஆனால் வலிமை போன்ற திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவே உருவாக்கப்பட்டது இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.