Ajith: வலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜித்..

வலிமை படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ajith: வலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜித்..
நடிகர் அஜித்
  • Share this:
போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கும் படம் வலிமை. அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் லாக்டவுன் அமலானதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் சண்டை காட்சிகளில் கலந்துகொண்டபோது நடிகர் அஜித்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டு அஜித்குமார் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதனை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார்.

மேலும் படிக்க...வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடி யார்?


அஜித்துக்கு காயம் ஏற்பட்டதை ரகசியமாக வைத்திருந்த படக்குழு படப்பிடிப்பு முடிந்த பின்னர் இத்தகவலை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிக்கும் வலிமை படம் குறித்து அண்மை காலமாக எந்த அப்டேட்டும் இல்லாதநிலையில், ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். தங்கள் தலயின் வலிமை குறித்து அப்டேட்டை வெளியிடுமாறு பட க்குழுவுக்கு கோரிக்கை வைப்பது போல், சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்திருந்தனர்.

இதனிடையே, பட ஷூட்டிங் தொடர்பாகவும், அதில் அஜித் காயம் ஏற்பட்டது குறித்தும் வெளியான செய்தி மீண்டும் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களால் பேசுபொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading