முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித் குமாரின் 'ஏகே 63' பட டைரக்டர் இவரா ? இது லிஸ்ட்லயே இல்லையே?! வேற லெவல் தகவல்!

அஜித் குமாரின் 'ஏகே 63' பட டைரக்டர் இவரா ? இது லிஸ்ட்லயே இல்லையே?! வேற லெவல் தகவல்!

அஜித் குமார்

அஜித் குமார்

ஏகே 62 படத்தின் படப்பிடிப்பே இன்னும் துவங்கப்படாத நிலையில் அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 63 படம் குறித்த சுவாரசியத் தகவல் ஒன்று பரவிவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து கடந்த 11 ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜித் குமார் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்துக்காக தயாராகிவருகிறார்.

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ஏகே 62 படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அஜித்குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சந்தானம் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். கீரிடம், பில்லா போன்ற படங்களில் அஜித்தும் சந்தானமும் இணைந்து நடித்த காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரையும் திரையில் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஏகே 62 படத்தின் படப்பிடிப்பே இன்னும் துவங்கப்படாத நிலையில் அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 63 படம் குறித்த சுவாரசியத் தகவல் ஒன்று பரவிவருகிறது. அந்தத் தகவல்படி ஏகே 63 படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம். மேலும் இந்தப் படத்தை அட்லி இயக்குவார் என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. அஜித் குமாரின் திரையுலக வரலாற்றில் பிரம்மாண்டமாக உருவாகும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தெறி, மெர்சல், பிகில் என இயக்குநர் அட்லி -  விஜய் காம்போ மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்கள். விஜய்க்கு போட்டி நடிகராக கருதப்படும் அஜித்துடன் இணைந்து அட்லி பணியாற்றுவாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. எனினும் அஜித்தின் வாலி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, விஜய்யை வைத்து குஷி என்ற படத்தை கொடுத்திருக்கிறார். திருப்பாச்சி, சிவகாசி என என விஜய்க்கு இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த பேரரசு, அஜித்துடன் திருப்பதி படத்தில் இணைந்து பணியாற்றினார். இப்படி சில உதாரணங்கள் இருப்பதால் ஏகே 63 படத்தை அட்லி இயக்க வாய்ப்புகள் இருக்கிறது.

இயக்குநர் அட்லி தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் தளபதி 68 படத்தை இயக்குவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Ajith