ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு - துணிவு போட்டி - அஜித் என்ன சொன்னார் தெரியுமா? - பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்

வாரிசு - துணிவு போட்டி - அஜித் என்ன சொன்னார் தெரியுமா? - பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

அந்த வகையில் கட் அவுட் வைப்பது, மாலைப் போட்டு பாத யாத்திரை செல்வது, தோப்புக்கரணம் போடுவடுவது என பல வித்தியாசமான நிகழ்வுகளில் இறங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் வாரிசு படமும், நடிகர் அஜித் குமாரின் துணிவு படமும் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே யார் நம்பர் 1, யார் சூப்பர் ஸ்டார் என்பது போன்ற சர்ச்சைகள் உருவாகிவருகிறது. யார் நம்பர் 1 என்பதை நிரூபிக்கவே விஜய் படத்துடன் தனது படத்தை அஜித் வெளியிட முடிவு செய்துள்ளார் என்று ஒரு தகவல் பரவியது.

அதற்கேற்ப இதுவரை எந்த அஜித் படத்துக்கும் இல்லாத அளவுக்கு துணிவு படம் விளம்பரப்படுத்தப்பட்டுவருகிறது. வாரிசு - துணிவு போட்டி குறித்து விஜய்யிடம் கேட்டபோது, வரட்டும் நண்பா அவரும் நண்பர் தானே என்று சொன்னதாக நடிகர் ஷாம் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சமுத்திரக்கனி துணிவு - வாரிசு போட்டி குறித்து அஜித் தன்னிடம் பேசியதை வெளியிட்டார். அதில், நம்ம வேலையை நாம ஒழுங்கா செய்வோம். அத இப்போ செஞ்சிருக்கோம் என்று அஜித் தெரிவித்ததாக சமுத்திரக்கனி குறிப்பிட்டுள்ளார்.

அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தை 11ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இதனை சிறப்பிக்கும் விதமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு இரண்டு படங்களையும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கட் அவுட் வைப்பது, மாலைப் போட்டு பாத யாத்திரை செல்வது, தோப்புக்கரணம் போடுவது என பல வித்தியாசமான நிகழ்வுகளில் இறங்கியுள்ளனர்.

First published:

Tags: Thunivu, Varisu