ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு பட புரொமோஷன்... சோகமான அஜித் ரசிகர்கள்...

துணிவு பட புரொமோஷன்... சோகமான அஜித் ரசிகர்கள்...

அஜித்

அஜித்

இதில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், நடிகை மஞ்சு வாரியர், தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரன் ஆகியோர் கலந்துக் கொள்வதாக தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படத்தின் புரொமோஷன் குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார், ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தின் முதல் சிங்கிளான ’சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஜிப்ரன் இசையமைத்த இந்தப் பாடலை அனிருத் பாடியிருந்தார். இதைத் தொடர்ந்து, காசே தான் கடவுளடா, கேங்ஸ்டா என அடுத்த இரண்டு பாடல்களும் வெளியாகின.

விஜய்யுடன் தளபதி 67-ல் நடிப்பதை உறுதி செய்த வில்லன் நடிகர்!

இந்நிலையில் துணிவு படத்தின் புரொமோஷன் வரும் 1-ம் தேதி தொடங்குவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், நடிகை மஞ்சு வாரியர், தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரன் ஆகியோர் கலந்துக் கொள்வதாக தெரிகிறது. வழக்கம் போல் துணிவு படத்தின் புரொமோஷனிலும் கலந்துக் கொள்வதில்லையாம். இதனால் சோகத்தில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ajith