Home /News /entertainment /

சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும் அஜித் - வைரலாகும் வீடியோ!

சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும் அஜித் - வைரலாகும் வீடியோ!

லண்டனில் அஜித்

லண்டனில் அஜித்

தனது ரசிகரின் பிறந்தநாளுக்கு அஜித் வாழ்த்து தெரிவித்த மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

    லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அஜித் ஷாப்பிங் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் அஜித் தற்போது ஐரோப்பாவில் உள்ள தனது நண்பர்களுடன் விடுமுறையை கழித்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர் லண்டன் முழுவதும் பைக் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட அஜித், ஐரோப்பா முழுவதும் சாலைப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

    தற்போது, லண்டனில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் அஜித் இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அங்கு ஷாப்பிங் செய்த அஜித், கடை உரிமையாளருடன் உரையாடி கை குலுக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

    தவிர சில தினங்களுக்கு முன்பு, தனது ரசிகரின் பிறந்தநாளுக்கு அஜித் வாழ்த்து தெரிவித்த மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதற்கிடையே ‘ஏகே 61’ படத்தின் மூன்றாவது ஷெட்யூல் இம்மாதம் சென்னையில் தொடங்கவுள்ளது. இதையடுத்து லண்டனில் விடுமுறை முடிந்து, அஜித் விரைவில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் ‘ஏகே 61’ படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.



    ‘ஏகே 61’ படத்திற்குப் பிறகு, அஜித் தனது அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தில் நடிக்கிறார். இதனை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith

    அடுத்த செய்தி