மீண்டும் ‘வலிமை’ ஷூட்டிங் கிளம்புகிறார் அஜித்

‘வலிமை’ படப்பிடிப்பில் நடிகர் அஜித் நாளை முதல் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ‘வலிமை’ ஷூட்டிங் கிளம்புகிறார் அஜித்
அஜித், ஹியூமா குரேஷி
  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான படப்பிடிப்பை படக்குழு நடத்தி முடித்திருக்கும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு.

இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடங்கியது. அதில் நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.


மேலும் படிக்க: தேவையற்ற போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் - ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல்

அதைத்தொடர்ந்து தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இன்று முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாகவும் நாளை முதல் அஜித் அதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பொங்கலுக்கு ‘வலிமை’ திரைப்படத்தை திரைக்கு கொண்டுவரவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading