Ajith Video - பெண்ணின் வேலை பறி போனதற்கு அஜித் தான் காரணமா?- மேனேஜர் விளக்கம்

Ajith Video - பெண்ணின் வேலை பறி போனதற்கு அஜித் தான் காரணமா?- மேனேஜர் விளக்கம்

அஜித் | பாதிக்கப்பட்ட பெண்

வீடியோ எடுத்த விவகாரத்தில் பர்ஜானா பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு அஜித் காரணமல்ல என்றும் மருத்துவமனை நிர்வாகமே சிசிடிவி கேமராவில் பார்த்துவிட்டு அவரை பணிநீக்கம் செய்து இருக்கிறது என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

  • Share this:
கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவமனை வந்த அஜித்தை ரசிகை ஒருவர் வீடியோ எடுத்த விவகாரம் தற்போது ஒரு பெண்ணின் தற்கொலை முயற்சி வரை சென்று காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான பர்ஜானா. சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக கடந்த ஐந்தாண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் .

இந்நிலையில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு நடிகர் அஜித் பரிசோதனைக்காக வந்துள்ளார். தீவிர தல அஜித் ரசிகரான பர்ஜானா ஆர்கோளாறு காரணமாக அஜித்தை வீடியோ எடுத்துள்ளார்.

இதை கண்காணித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் செல்போனை பறித்து வைத்துக்கொண்டதாக தெரிகிறது. மீண்டும் செல்போன் பர்ஜானாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எப்படியோ வீடியோ கசிந்து சமூக வளைத்தலங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்திற்கு கொரோனோவா என்ற கேள்விக்குறியுடன் அந்த வீடியோவை ஒரு சிலர் சமூகவலைதளத்தில் பரப்ப பர்ஜானாவை மருத்துவமனை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. அஜித்தின் மனைவி வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் அவரை பணியில் சேர்த்து கொண்டு எந்த வேலையும் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. பிறகு பணி நீக்கமும் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட பர்ஜானா மருத்துவமனை தரப்பிடமும் நடிகர் அஜித்தின் மனைவி சாலினியிடமும் மன்னிப்பு கேட்டு முறையிட்டுள்ளார்.



ஆனால் மருத்துவமனை நிர்வாகம் லோன் காரணங்களை காட்டி பர்ஜானாவின் படிப்பு சான்றிதழ்களை கொடுக்க மறுத்து இழித்தடித்து வந்துள்ளது. இதனால் கடந்த ஒராண்டாக பணிக்கு செல்ல முடியாதவர் வயதான தாய் தந்தையை கவணிக்க முடியாமல் இருந்துள்ளார். நடிகர் அஜித்தை தொடர்பு கொண்டு நடந்த தகவல்களை தெரிவிக்கலாம் என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தொடர்பு கொண்டுள்ளார்.

முதலில் அஜித்திடம் பேசி நிவாரணம் வாங்கி தருவதாக தெரிவித்த சுரேஷ்சந்திரா பிறகு முடியாது என்று மறுத்துள்ளார். அதனால் மனமுடைந்த பர்ஜானா சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பர்ஜானா கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ்சந்திரா மீது ஏமாற்றுதல் ,நம்பிக்கை துரோகம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இச்சம்பவம் குறித்து தொலைபேசி வாயிலாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் ஆனந்துக்கு அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்தார். அவர் கூறியதாவது, பர்ஜானா பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு அஜித் காரணமல்ல. மருத்துவமனை நிர்வாகமே சிசிடிவி கேமராவில் பார்த்துவிட்டு அவரை பணிநீக்கம் செய்து இருக்கிறது.

இந்த தகவலை பர்ஜானாவிடம் தெரிவித்தபோது என்னுடைய குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்த கூட பணம் இல்லை என்று கூறினார். அதனை செலுத்துவதற்கு அஜித் முன்வந்தார். ஆனால் பள்ளியில் நேரடியாக செலுத்த விடாமல் அதனை பர்ஜானா தன் கையில் கொடுக்க சொன்னதால் அது கடைசிவரை கொடுக்க முடியாமல் போனது. பின்னர் அவர் காவல் துறையில் புகார் கொடுத்து விட்டதால் அதோடு அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டேன்.” இவ்வாறு சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published: