Ajith Fan Prakash: உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொண்ட அஜித்தின் தீவிர ரசிகர் தற்கொலை

Ajith Fan Prakash: உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொண்ட அஜித்தின் தீவிர ரசிகர் தற்கொலை

பிரகாஷ் - அஜித்

அவர் அஜித்தை எவ்வளவு நேசித்தார் என்பதை பிரகாஷின் புகைப்படங்கள் காட்டுகின்றன.

  • Share this:
    தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஒருவர். இவருக்கென பெருமளவு ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

    அஜித்தை தங்கள் ரோல் மாடலாக கருதும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் அவரது பெயரையும், அவர் நடித்த படங்களையும் சமூக வலைதளங்களில் எப்போதும் ட்ரெண்டிங்கில் வைத்திருக்கிறார்கள்.

    ajith hardcore fan prakash died by suicide
    அஜித் ரசிகர் பிரகாஷ்


    Bharathi Kannamma: 8 வருடத்திற்குப் பிறகு கண்ணம்மா செய்த விஷயம், மனம் மகிழ்ந்த மாமியார்!

    இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் தீவிர ரசிகர் என்று கூறப்படும் பிரகாஷ் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்திருப்பது பிற ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. அவர் அஜித்தை எவ்வளவு நேசித்தார் என்பதை பிரகாஷின் புகைப்படங்கள் காட்டுகின்றன. அவர் அஜித்தின் பெயரையும் அவரது டயலாக்குகளையும் உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார்.

    ajith hardcore fan prakash died by suicide
    தற்கொலை செய்துக் கொண்ட பிரகாஷின் உடல்


    Bharathi Kannamma Lakshmi: பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை லட்சுமி யார் தெரியுமா?

    பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரகாஷ், கூட்டத்தில் உரத்த ஆரவாரத்துடன் தனது உடலில் எப்படி பச்சை குத்தினார் என்பதை விளக்கிய வீடியோ க்ளிப்பும் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து உலகெங்கிலும் உள்ள அஜித் ரசிகர்கள் பிரிந்து சென்ற ஆத்மாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அருகில் வசிப்பவர்கள் பிரகாஷின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: