வலிமை படத்துக்காக நாளை ரஷ்யா செல்லும் அஜித்...!

அஜித்

முக்கியமான சண்டைக் காட்சியை படமாக்குவதால் தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே ரஷ்யா கிளம்பிச் சென்றுள்ளார். அங்கு அஜித் இடம்பெறும் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சியில் நடிப்பதற்காக நாளை அஜித் ரஷ்யா செல்கிறார்.

நேர்கொண்ட பார்வையை தயாரித்த போனி கபூர் தயாரிப்பில், அந்தப் படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படம் தயாராகிறது. இதன் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் ஒரேயொரு ஆக்ஷன் காட்சி மட்டும் எடுக்கப்படாமலிருந்தது. வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சி அது. கொரோனா பெருந்தொற்றால் வெளிநாடு செல்வதில் ஏற்பட்ட தடை காரணமாக அதனை இன்னும் படமாக்காமல் இருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் குறிப்பிட்ட காட்சியை ரஷ்யாவில் படமாக தீர்மானித்து வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர். நாளை அஜித்தும் ரஷ்யா கிளம்பிச் செல்கிறார்.

Also read... ஓடிடியில் சந்தானத்தின் டிக்கிலோனா - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முக்கியமான சண்டைக் காட்சியை படமாக்குவதால் தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே ரஷ்யா கிளம்பிச் சென்றுள்ளார். அங்கு அஜித் இடம்பெறும் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஆக்ஷன் காட்சியுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துவிடும். உடனடியாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கி தீபாவளிக்கு படத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த தீபாவளிக்கு வரும் நிலையில் வலிமை அதனுடன் மோதவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: