Ajith: பிடுங்கிய செல்போனை திருப்பிக் கொடுத்த அஜித்

நடிகர் அஜித்

நேற்று வாக்களிக்க வந்த இடத்தில் செல்ஃபி எடுத்து தொந்தரவு செய்த ரசிகரின் செல்போனை அஜித் பிடுங்கிக் கொண்டது வைரலானது. அந்த செல்போன் என்ன ஆனது என்பது குறித்து இணையத்தில் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.

  • Share this:
நேற்று தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. காலையில் முதல் ஆளாக மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார் அஜித். அப்போது ரசிகர்கள் சிலர் அவரை சூழந்து கொண்டு செல்ஃபி எடுத்தனர். ஒரு ரசிகர் விடாமல் செல்ஃபி எடுக்க, அந்த ரசிகரிடமிருந்து போனை அஜித் பிடுங்கிக் கொண்டார். இந்த செய்தி நேற்று வைரலானது. அஜித் அந்த செல்போனை என்ன செய்தார் என்பது குறித்து இணையத்தில் சர்ச்சையானது. இதற்கு அந்த ரசிகரே பதிலளித்துள்ளார்.

அஜித் தன்னிடமிருந்து வாங்கிய செல்போனை திருப்பித் தந்ததாக அந்த ரசிகர் கூறியுள்ளார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வலம் வருகிறது. அஜித் தனது உதவியாளரிடமிருந்து அந்த ரசிகரின் போனை வாங்கி எச்சரிக்கை செய்து ரசிகரிடம் அதனை திருப்பி தரும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

வாக்குசாவடி, கோவில் போன்ற பொது இடங்களில் ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் பிரைவஸியை மதிக்காமல் தொந்தரவு செய்வது அநாகரிகம். அதற்கு நாகரிகமான முறையில் எதிர்வினை செய்துள்ளார் அஜித். இனிமேலாவது ரசிகர்கள் பொது இடங்களில் பிரபலங்களின் பிரைவஸியை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
Published by:Sheik Hanifah
First published: