ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சபரி மலையில் ‘துணிவு’ போஸ்டருடன் அஜித் ரசிகர்கள்… படம் வெற்றிபெற வேண்டுதல்

சபரி மலையில் ‘துணிவு’ போஸ்டருடன் அஜித் ரசிகர்கள்… படம் வெற்றிபெற வேண்டுதல்

சபரிமலையில் துணிவு போஸ்டருடன் அஜித் ரசிகர்கள்...

சபரிமலையில் துணிவு போஸ்டருடன் அஜித் ரசிகர்கள்...

3 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு மேற்கொண்ட நீரவ் ஷா துணிவு படத்திலும் பணியாற்றியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    துணிவு படம் வெற்றி பெறுவதற்காக அஜித் ரசிகர்கள் சபரி மலை ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை செய்துள்ளனர். இதுதொடர்பான ஃபோட்டோ ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது.

    அஜித், போனி கபூர், எச்.வினோத் கூட்டணியில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. பொங்கலையொட்டி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    வங்கி கொள்ளையை மையமாக வைத்து துணிவு திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். 3 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    வெளியானது சசிகுமாரின் ’காரி’ - படம் எப்படி இருக்கு?

    வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு மேற்கொண்ட நீரவ் ஷா துணிவு படத்திலும் பணியாற்றியுள்ளார். விஜய் நடித்துள்ள வாரிசு படத்துடன் துணிவு பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதால் இவ்விரு படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    துணிவு படத்தின் புரொமோஷன் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இருப்பினும் படத்திலிருந்து வெளியிடப்பட்ட 2 போஸ்டர்கள், மற்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து வெளியாகும் டப்பிங் புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் துணிவு படம் வெற்றி பெற வேண்டி, சபரி மலை ஐயப்பன் கோவிலில் அஜித் ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். ஐயப்பன் கோவிலில் துணிவு படத்தின் போஸ்டருடன் அஜித் ரசிகர்கள் இடம்பெறும் ஃபோட்டோ ஒன்று வைரலாகியுள்ளது.

    ஓடிடியில் வெளியான ‘காந்தாரா’ : ‘வராஹ ரூபம்’ பாடல் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

    டிசம்பர் தொடக்கத்தில் துணிவு படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்திலும், லைகா வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith