Home /News /entertainment /

Valimai: சேலத்தில் திரையரங்கை சூறையாடிய அஜித் ரசிகர்கள் - போலீஸ் குவிப்பு

Valimai: சேலத்தில் திரையரங்கை சூறையாடிய அஜித் ரசிகர்கள் - போலீஸ் குவிப்பு

 திரையரங்கை சூறையாடிய அஜித் ரசிகர்கள்

திரையரங்கை சூறையாடிய அஜித் ரசிகர்கள்

Valimai: சேலத்தை பொருத்தவரை 15க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலிமை திரையிடப்பட்டுள்ளது. இதை வரவேற்கும் விதமாக நள்ளிரவு முதலமே ரசிகர்கள் திரையரங்குகளின் முன்பு மேளதாளங்களுடன் குவிந்தனர்.

  • News18
  • Last Updated :
சேலத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆன மல்டிபிளக்ஸ் தியேட்டரில் கண்ணாடி மற்றும் பால் சீலிங் உடைத்து கலாட்டா செய்த அஜித் ரசிகர்கள்.

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் இன்று வெளியானது. சேலம்,  நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான தியேட்டர்களில் வலிமை படம் இன்று திரையிடப்பட்டுள்ளது.

சேலத்தை பொருத்தவரை 15க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இதை வரவேற்கும் விதமாக நள்ளிரவு முதலமே ரசிகர்கள் திரையரங்குகளின் முன்பு மேளதாளங்களுடன் குவிந்தனர். நடனமாடி உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சில இடங்களில் நேற்று இரவு முதலே விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான திரையரங்குகளில் அஜித் ரசிகர்களுக்காக இன்று அதிகாலை சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் என்ற 5 தியேட்டர்களில் வலிமை படம் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் இன்று அதிகாலை 3 மணி அளவில் இருந்து திரளான அஜித் ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டனர்.

அப்போது சில ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆடி பாடி உடனே படம் திரையிட வேண்டும் என கூச்சலிட்டனர் . அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் இன்னும் சற்று நேரம் ஆக வேண்டும் . சிறிது நேரத்தில் படம் திரையிடுகிறோம் என தெரிவித்தனர். ஆனால் இதை கேட்காமல் சில ரசிகர்கள் டிக்கெட் கவுண்டரில் இருந்த பால் சீலிங் மற்றும் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் தியேட்டருக்குள் செல்லும் வழியில் இருந்த கிரில் கேட்டை உடைத்துக்கொண்டு தியேட்டருக்குள் உள்ளே செல்ல முயற்சித்தனர். இதனால் தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.

Also read... Valimai: கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யமால் இலவசமாக பால் வழங்கிய அஜித் ரசிகர்கள்!

இதனையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . உடனே சேலம் மாநகர் பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து ரசிகர்களை அமைதிப்படுத்தினர். பின்னர் வலிமை படம் திரையிடப்பட்டது.

அதன் பின்னரும் வலிமை படம் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்தபடியே இருந்தனர். தியேட்டரில் வேறு ஏதாவது தகராறு வந்துவிடாமல் இருக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கையாக  தற்போது கூடுதலாக போலீசார் தியேட்டர் முன் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Ajith, Ajith fans, Valimai

அடுத்த செய்தி