Valimai Update: யூரோ கால்பந்து போட்டியில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்!

வலிமை அப்டேட்

லிமை அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்கள் சோர்வடைந்து விட்டனர்.

  • Share this:
    யூரோ கால்பந்து போட்டியின் போது அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் ஹெச்.வினோத். அடுத்து அஜித்திடம் கதை சொல்லி, அவரது சம்மதத்தையும் பெற்றார். அந்த நேரத்தில் போனி கபூருக்கு படம் பண்ணித்தர வேண்டியிருந்ததால், இந்தி பிங்கின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். இயக்குநருக்கு ஏன் அலைய வேண்டும் என்று பிங்க் தமிழ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பை வினோத்திடம் அளித்தார். நேர்கொண்ட பார்வையாக அப்படம் வெளியானது. இதையடுத்து மீண்டும் போனி கபூர், அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் வலிமை படத்தின் வேலைகளை தொடங்கப்பட்டது. தற்போது வலிமை படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் அதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்கள் சோர்வடைந்து விட்டனர். கிடைக்கும் கேப்பில் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் தற்போது மேலும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது. யூரோ கால்பந்து போட்டியின் போது அஜித் ரசிகர்கள், வலிமை அப்டேட் கேட்டு பதாகைகளை ஏந்தியுள்ளனர். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: