ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படம் குறித்து இசையமைப்பாளர் கொடுத்த அப்டேட்... கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

துணிவு படம் குறித்து இசையமைப்பாளர் கொடுத்த அப்டேட்... கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

துணிவு

துணிவு

இந்த ஆண்டு தீபாவளிக்கு துணிவு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடர்ச்சியாக தள்ளிக் கொண்டே சென்றதால், துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கொடுத்த அப்டேட் பார்த்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கம் துணிவு திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி, அமீர், பாவ்னி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. 55 நாட்களுக்கு மேல் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்தனர். அதன் பின்பு படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்றன. அந்த சமயத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.

அதன் பின் சென்னை திரும்பி அவர், மீண்டும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த 23ஆம் தேதி நடிகர் அஜித்குமார் தாய்லாந்து புறப்பட்டார்.  அங்கு கடந்த 18 நாட்களாக தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் அக்டோபர் 11-ம் தேதி தாய்லாந்து நாட்டில் நிறைவடைந்தது. பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார். அதனால் படத்தின் இறுதி கட்டப் பணிகளை விரைவில் முடிக்கவும் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக துணிவு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் நிறைவு பெற்று டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு, துணிவு படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.  வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இந்தப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக துணிவு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் நிறைவு பெற்று டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு, துணிவு படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.  வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இந்தப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.

1987 - இல் பஞ்சாபில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘துணிவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கு துணிவு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடர்ச்சியாக தள்ளிக் கொண்டே சென்றதால், துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... உதயநிதி தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் - இயக்குநர் மிஷ்கின்!

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ரசிகர்களுக்கு இன்பதர்ச்சி கொடுத்திருக்கிறார். ஆம், இயக்குநர் எச்.வினோத் உடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு.

அதில் “எனது இயக்குனரின் பரபரப்பான ஷெட்யூலுக்குப் பிறகு ஒரு இசை விவாதம் மற்றும் எனது புன்னகையே படத்தைப் பற்றிய அனைத்தையும் சொல்விடும்” என பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ajith