பிரபல தியேட்டர் முன் அஜித் ரசிகர் தீக்குளிக்க முயற்சி...

News18 Tamil
Updated: August 7, 2019, 11:58 PM IST
பிரபல தியேட்டர் முன் அஜித் ரசிகர் தீக்குளிக்க முயற்சி...
News18 Tamil
Updated: August 7, 2019, 11:58 PM IST
சென்னையில் நேர்கொண்ட பார்வை படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில், சத்யம் திரையரங்கில் தனக்கு அருகில் இருந்த நபர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க தீப்பெட்டி தேடிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்துக்கான டிக்கெட் பிரச்னையில் இவ்வாறு அந்த நபர் செய்ததாகவும், அவரை போலீஸ் கைது செய்ததாகவும் சாந்தனு தெரிவித்துள்ளார்.

அஜித் மற்றும் மற்ற திரை நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்கள் மேற்காணும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கக்கூடாது என்றும் சாந்தனு தனது டிவீட்டில் கேட்டுக்கொண்டுள்ளார்.


I DONT KNW WAT TO SAY!இந்த சம்பவம் குறித்து சாந்தனு பதிவிட்டுள்ள ட்வீட்டில் பதில் அளித்துள்ள பலர், புகைப்படம் அல்லது ஆதாரம் கேட்டு பதிவிட்டுள்ளனர்.

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...