ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் ரசிகரின் செயலைப் பாராட்டிய அஜித் ரசிகர் - இணையத்தில் வைரல்!

விஜய் ரசிகரின் செயலைப் பாராட்டிய அஜித் ரசிகர் - இணையத்தில் வைரல்!

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களில் ஒருவரான பர்வேஸ் நேரில் சென்று சுசீலாவுக்கு நிதியுதவி செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விஜய் ரசிகரை அஜித் ரசிகர் பாராட்டிய விஷயம் ட்விட்டரில் கவனம் ஈர்த்து வருகிறது.

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணையத்தில் போட்டுக் கொள்ளும் சண்டைகளுக்கு என்றுமே பஞ்சமில்லை. இரண்டு தரப்பும் தங்கள் பிரியமான நடிகருக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள், அவர்களால் ஒரு சின்ன இன்சல்ட்டை கூட தாங்கிக் கொள்ள முடியாது. இதில் அரிதான விஷயமாக விஜய் ரசிகரை, அஜித் ரசிகர் பாராட்டியிருப்பது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சுசீலாவின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரது மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கவும், மூன்று மகள்களை வளர்க்கவும் அவர் ஆட்டோ ஓட்டுகிறார். சுசீலாவுக்கு ஆரம்பத்தில் சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது, ஆனால் விடாமுயற்சியால் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டு, இப்போது நாள் ஒன்றுக்கு ஐநூறு ரூபாய் சம்பாதிக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்

நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...

சுசீலாவின் கதை முன்னணி டிவி சேனலில் வெளியானதையடுத்து இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது. இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களில் ஒருவரான பர்வேஸ் நேரில் சென்று சுசீலாவுக்கு நிதியுதவி செய்தார். இதைத் தான் அஜித் ரசிகர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vijay, Ajith